Advertisement

பிசிசிஐ தேர்தலில் பின் வாங்கிய கங்குலி; ரோஜர் பின்னிக்கு வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தேர்தலில் நீடிக்க சவுரவ் கங்குலிக்கு விருப்பம் இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
India's 83 World Cup Star To Be BCCI's New President; Sourav Ganguly To End His Tenure Soon
India's 83 World Cup Star To Be BCCI's New President; Sourav Ganguly To End His Tenure Soon (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2022 • 01:37 PM

பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் புதிய தலைவர்களுக்கான தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2022 • 01:37 PM

வரும் அக்டோபர் 13ஆம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 14ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உயர் பதவிகளில் 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

Trending

இந்நிலையில் பிசிசிஐ தேர்தலில் சவுரவ் கங்குலி நிற்கபோவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கங்குலி, ஜெய் ஷா உள்ளிட்ட பல பிரமூகர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கங்குலி தேர்தலில் நிற்க வேண்டாம் எனவும், ஜெய் ஷா மீண்டும் செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஐசிசி தான்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளனர். பிசிசிஐ-க்கு அதிக ஆதரவு இருக்கும் என்பதால் கங்குலி வெற்றி பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி, பிசிசிஐன் அடுத்த தலைவராக அதிக வாய்ப்புள்ளது. கங்குலிக்கு அடுத்தபடியாக இந்த தேர்தலில் அதிக ஆதரவு உள்ளவராக இருப்பது ரோஜர் பின்னி தான். இவர் 1979இல் இருந்து 1987 வரை இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement