வீரர்கள் ஜெர்ஸியிலிருந்த இந்தியாவின் பெயர் நீக்கம்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய ஜெர்ஸியிலிருந்த இந்தியா எனும் பெயருக்கு பதிலாக ட்ரீம் லெவன் எனும் ஸ்பான்ஷரின் பெயர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி புதிதாக மாற்றப்பட்டது. இதில் உலகப் புகழ்மிக்க அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சர் செய்தது. மேலும் அந்த ஜெர்சியின் நடுவில் இந்தியா என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த ஜெர்ஸியின் தரம் சிறப்பாக இருப்பதாகவும் பார்ப்பதற்கு அழகாக உலகத்தரம் வாய்ந்த ஜெர்சியாக இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டினர்.
மேலும் அடிடாஸ் நிறுவனம் தங்களுடைய லோகோவை மட்டும் போட்டு வேறு எதையும் அச்சடிக்காமல் இருந்தது சிறந்த முடிவு என்று பாராட்டினர். இந்த நிலையில் ரசிகர்களின் இந்த சந்தோஷத்தை பிசிசிஐ கொஞ்ச நாள் கூட நிலைக்க விடவில்லை. காரணம் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி ஜெர்சியில் புதிய மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.
Trending
அதில் ஜெர்சியின் முன் பகுதியில் இந்தியா என்று எழுதி இருக்கும். அதனை தற்போது மாற்றி ட்ரீம் 11 என்று நிறுவனத்தின் பெயர் இடம் பெற்று இருப்பது போல் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜெர்சியின் நடுவில் இருந்த இந்தியா என்ற வார்த்தையை ஏன் நீக்கினீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ஜெர்சியில் இதுபோல் நிறுவனத்தின் பெயர் இடம் பெறுவதன் மூலம் பிசிசிஐக்கு கோடி கணக்கில் பணம் கிடைக்கும். இதனால்தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. பணம் வரும் என்பதற்காக இந்தியா என்ற பெயரை நீக்கியது சரியா என்று பலரும் பிசிசிஐ-யை கேள்வி கேட்டு வருகின்றனர்.இது உள்ளூர் கிரிக்கெட் அணியில் வீரர்கள் போடப்பட்டிருக்கும் ஜெர்சி போல் தற்போது மாறிவிட்டதாகவும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now