
India’s squad for the Sri Lanka series has assembled in Mumbai (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஷிகர் தவான் தலமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த அணியில் வருண் சக்ரவர்த்தி, நிதீஷ் ராணா, சேதன் சக்காரியா உள்ளிட்ட 6 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இம்மாதம் இறுதியில் இலங்கை செல்லவுள்ள இந்திய அணியினர், அதற்கு முன்னதாக மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.