Advertisement

INDW vs ENGW, 1st ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு !

இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவுசெய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 28, 2021 • 10:53 AM
INDW vs ENGW, 1st ODI:  England Women have won the toss and have opted to field
INDW vs ENGW, 1st ODI: England Women have won the toss and have opted to field (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 27) பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Trending


இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.  

இன்றைய போட்டிகான இந்திய அணியில் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். 

இந்திய அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, புனம் ரவுத், மிதாலி ராஜ் (கே), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரகர், ஈக்டா பிஸ்ட்.

இங்கிலாந்து அணி- லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹீத்தர் நைட் (கே), நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டாங்க்லி, சாரா கிளென், கேத்ரின் பிரண்ட், அன்யா ஷ்ரூப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement