-mdl.jpg)
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் அபார வெற்றியைப் பதிவுசெய்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூனறாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெற்றது.
சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு வழக்கம் போல் கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த லாரா வோல்வார்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மரிஸான் கேப்பும் 10 ரன்களுக்கும், தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிதனர்.