Advertisement

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச ல
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச ல (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 28, 2025 • 01:50 PM

India Women vs South Africa Women Dream11 Prediction, 2nd ODI Tri Series: இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெறவுள்ளது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 28, 2025 • 01:50 PM

இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன் இளம் வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read

IN-W vs SA-W ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
இடம் - ஆர். பிரமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- ஏப்ரல் 29, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs SA-W ODI, Pitch Report

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இங்கு இதுவரை 170 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 92 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 66 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs SA-W: Where to Watch?

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் FanCode செயலியில் பார்க்கலாம்.

IN-W vs SA-W Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • இந்திய மகளிர் அணி - 17
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 12
  • முடிவில்லை - 01

IN-W vs SA-W ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: லாரா வால்வார்ட்(துணைக்கேப்டன்), சுனே லூஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), பிரதிகா ராவல்
  • ஆல்-ரவுண்டர்கள்: தீப்தி சர்மா, நதின் டி கிளர்க்
  • பந்துவீச்சாளர்: ஸ்நே ரானா, நல்லபுரெட்டி சரணி, அயபோங்கா காக்கா, மசபாடா கிளாஸ்

South Africa Women vs India Women ODI Probable Playing XI

South Africa Women Probable Playing XI: லாரா வோல்வார்ட்(கேப்டன்), டஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், நாதின் டி கிளர்க், லாரா குட்ஆல், சினாலோ ஜாஃப்டா, நோண்டுமிசோ ஷங்கேஸ், மசபாடா கிளாஸ், நோன்குலுலுகோ மலாபா, அயபோங்கா காக்கா.

India Women Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, காஷ்வீ கௌதம், அருந்ததி ரெட்டி, ஸ்னே ராணா, நல்லபுரெட்டி சரணி

IN-W vs SA-W Dream11 Prediction, IN-W vs SA-W ODI Dream11 Team, Fantasy Cricket Tips, ODI Tri Series, IN-W vs SA-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, India Women vs South Africa Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement