ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு - மஹேலா ஜெயவர்த்னே!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது பெரும் பின்னடைவாக இருக்கும் என இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்னே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், அடுத்தமாதம் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், டி 20 உலக கோப்பை அணியில் ஜடேஜா இல்லாதது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலாஜெயவர்தனே சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “ஜடேஜா 5ஃஃவது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல் ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இருந்தபோது அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தது.
ஜடேஜா காயத்தால் விலகியபின் அணியில் இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என்பதாலே தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்டை அணி 4ஆவது அல்லது 5ஆவது வரிசையில் ஆட தேர்வு செய்தது. உலக கோப்பையில் இந்திய அணி 4 அல்லது 5ஆவது வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என தேர்வு செய்ய வேண்டும்.
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு, அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now