இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 48 போட்டிகளை நடத்த ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளன.
அதில் அக்டோபர் 8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதனிடையே ஐசிசி அட்டவணை வெளியாவதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள விரும்பவில்லை.
அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியை சேப்பாக்கத்தை எதிர்கொள்ள விரும்புகிறோம். அதனால் பெங்களூரு மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டியை, ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தன் போட்டியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.