டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் ரொக்கார்ட்!
டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வைத்திருக்கும் விசித்திரமான சாதனை குறித்த விவரம் தற்போது வைரலாகி வருகிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 17ஆம் தேதி முதல் உலகக் கோப்பை டி20 போட்டிகளானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் முதலில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது நேற்று முதல் சூப்பர் 12-சுற்று போட்டிகள் துவங்கியுள்ளன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரு வெற்றி பெற்று கணக்கை துவங்கியுள்ளன.
Trending
இந்நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடையாத இந்திய அணி இம்முறையும் தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும்.
அதே போன்று இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்ற மோசமான சாதனையை நீக்கி புதிய சரித்திரம் படைக்க பாகிஸ்தானை அணியும் காத்திருக்கிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நிலவும் என்றே கூறலாம்.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இரு அணிகளுக்குமே சமமான வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வைத்திருக்கும் விசித்திரமான சாதனை குறித்த விவரம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த சாதனை யாதெனில் இதுவரை டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி விளையாடியுள்ள வரை ஒரு முறை கூட பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அவரை வீழ்த்தியது கிடையாது. இதுவரை டி20 உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ள விராட் கோலி 78*, 36*, 55* ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் இந்தியா அணியை அசைத்துப் பார்க்க வேண்டுமெனில் நிச்சயம் விராட் கோலியின் விக்கெட் என்பது அவர்களுக்கு முக்கியமான ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now