
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிரதான சூப்பர்-12 ஆட்டங்கள் 23ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்திய அணி தனது முதல்ஆட்டத்தில் 24ஆம் தேதி பாகிஸ்தானைச் சந்திக்கிறது. இந்திய அணி இடம் பெற்றுள்ள சூப்பர்-12 பி பிரிவில் இந்திய அணியோடு பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும்,தகுதிச்சுற்றில் மூலம் வரும் இரு அணிகளும் இடம் பெறும்.
சூப்பர்-12 பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒவ்வொன்றுக்கும் இரு பயிற்சி ஆட்டங்ககள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த 2-வது பயிற்சி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. ஏறக்குறைய ப்ளேயிங் லெவனில் இந்திய அணியில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது இந்த இரு போட்டிகளிலும் உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் கூறுகையில், “எந்தப் போட்டித் தொடரிலும் ஒரு குறிப்பிட்ட அணிதான் வெல்லும் எனக் கணிப்பது கடினம், அவ்வாறு கூற முடியாது. ஆனால், எந்த அளவு வெற்றிக்கான வாய்ப்புக் குறித்துக் கூற முடியும். என்னைப் பொறுத்தவரை, இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது சூழல் அதற்குச் சாதகமாக இருக்கிறது. இந்திய அணியில் இருப்போர் அனைவரும் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடியஅனுபவம் உடையவர்கள்.