Advertisement

ஐபிஎல் 2022: சிஎஸ்கே மேட்ச் வின்னர் இன்று குஜராத் நெட் பவுலர்!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்த மோஹித் சர்மா இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக செயல்பட்டுவருகிறார். 

Bharathi Kannan
By Bharathi Kannan March 20, 2022 • 13:30 PM
IPL 2014's Purple Cap Winner Mohit Sharma Turns Up As A Net Bowler For Gujarat Titans Ahead Of IPL 2
IPL 2014's Purple Cap Winner Mohit Sharma Turns Up As A Net Bowler For Gujarat Titans Ahead Of IPL 2 (Image Source: Google)
Advertisement

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா 2013 முதல் 2015 வரை, உலக அளவில் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருந்து வந்தார். குறிப்பாக ஐபிஎலில் இந்த மூன்று வருடங்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 57 விக்கெட்களை குவித்து அசத்தியிருந்தார்.

குறிப்பாக, 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 23 விக்கெட்களை கைப்பற்றி, பர்பிள் தொப்பியை கைப்பற்றியிருந்தார். மேலும் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, 2015இல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

Trending


அதன்பிறகு இரண்டு வருடங்கள் (2016,2017) சிஎஸ்கே தடை செய்யப்பட்ட போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்து, விளையாடினார். இருப்பினும், சிஎஸ்கேவில் ஜொலித்ததைபோல், பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்துவீச முடியவில்லை. பிறகு 2019ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு திரும்பிய அவர், ஒரு போட்டியில் மூன்று ஓவர்கள் மட்டும் வீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அதன்பிறகு சிஎஸ்கேவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் டெல்லி அணிக்கு சென்ற நிலையில், அங்கும் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் விரை விட்டுக் கொடுத்ததால், அவரது ஐபிஎல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது. ஆம், 2021ஆம் ஆண்டில் எந்த அணியும் இவரை வாங்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்திலும், ஏலம் போகவில்லை.

இந்நிலையில், அவர் தற்போது குஜராத் டைடன்ஸ் அணியில் நெட் பௌலராக இணைந்துள்ளார். இவருடன் சேர்த்து பரிந்தர் சரண், லுக்மென் மெரிவாலா ஆகியோர் வேகப்பந்து வீச்சு நெட் பௌலராக இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் சிஎஸ்கேவின் முக்கிய பௌலராகவும், தோனியின் நம்பிக்கைக்கு உரிய பௌலராகவும் இருந்து வந்த மோஹித் ஷர்மா, திடீரென்று நெட் பௌலராக மாறியுள்ளது, சிஎஸ்கே ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement