
ஐபிஎல்லில் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ரோஹித் சர்மா 5 முறை, தோனி 4 முறை ஐபிஎல் கோப்பையை தங்கள் அணிகளுக்கு வென்று கொடுத்த நிலையில், சாம்பியன் வீரரான கோலி மட்டும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது அவரது ஐபிஎல் கெரியரில் கரும்புள்ளியாக இருந்துவருகிறது.
கடந்த 2016 ஐபிஎல்லில் கோலி செம ஃபார்மில் அபாரமாக விளையாடி 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்தார். அந்த சீசனில் கோலியின் அபாரமான பேட்டிங்கால் இறுதிப்போட்டி வரை சென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது.
சன்ரைசர்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆர்சிபி தான் வெற்றி பெற்று கோப்பையை தூக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆர்சிபி அணி. அந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 208 ரன்கள் அடித்தது. அந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடிய ஷேன் வாட்சன் வீசிய கடைசி ஓவரில் பென் கட்டிங் காட்டடி அடித்து 24 ரன்களை குவித்தார்.