
IPL 2021: 7 franchises bring in record 17 replacement players for IPL 2021 Phase 2 – Check full list (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், மீண்டும் இன்று (செப்.19) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இத்தொடரில் இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 27 நாட்களில் அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன. இத்தொடரின் இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது.