
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த சீசனில் இதுவரை 20 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து டெல்லி அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் வீரர்கள் பலர் தொடரிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்பின் பவுலர் அஸ்வின் சொந்த காரணத்தினால் இந்த சீசனில் இருந்து நேற்று வெளியேறினார். இவரை தொடர்ந்து பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா மற்றும் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனது சொந்த காரணத்தினால் வெளியேறுகிறார்கள் என்று ஆர்சிபி அறிவித்தது.