Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிய முக்கிய அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அனைத்து வீரர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement
IPL 2021: BCCI asks franchises to ensure completion of COVID-19 vaccination of all members heading t
IPL 2021: BCCI asks franchises to ensure completion of COVID-19 vaccination of all members heading t (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 06, 2021 • 01:26 PM

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், கரொனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 06, 2021 • 01:26 PM

அதன்படி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கும் இப்போட்டிகள் ஆக்டோபர் 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் முதல் போட்டியையேயா சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Trending

இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் இந்தமாத இறுதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படவுள்ளனர். 

இந்நிலையில், யுஏஇ செல்லை அனைத்து அணிகளுக்கு பிசிசிஐ இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், இதனை அனைத்து அணி நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் ஏழு நாள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னரே பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement