
IPL 2021: Big IPL Prediction by birthday boy Aakash Chopra (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாக துவங்க உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் மிகப்பெரிய இரண்டு அணிகளாக திகழும் ஜாம்பவான் அணிகள் இன்று மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய தொடர் ரசிகர்களை வசீகரித்த வந்துள்ளதால் இந்தத் தொடரின் மீதான ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.