Advertisement

ஐபிஎல் 2021: இந்த அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும் - பிராட் ஹாக் நம்பிக்கை

அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Advertisement
IPL 2021: Brad Hogg names the ‘team to beat’ in IPL’s UAE leg
IPL 2021: Brad Hogg names the ‘team to beat’ in IPL’s UAE leg (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 17, 2021 • 07:29 PM

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நாளை மறுநாள் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது

Bharathi Kannan
By Bharathi Kannan
September 17, 2021 • 07:29 PM

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த நிலையில் முதல் போட்டியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Trending

இந்நிலையில் தற்போது இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இது குறித்த பல கருத்துக்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரரான பிராட் ஹாக் இம்முறை ஐபிஎல் தொடரை கைப்பற்ற போகும் அணி எது ? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், “டெல்லி கேபிட்டல்ஸ் அணி இம்முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. பாதியில் ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் கிடைத்த நாட்களை பயன்படுத்தி ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது அணியில் திரும்பி வந்துள்ளார். அதே போன்று அஸ்வினும் அணியில் இருப்பதால் அது மேலும் பல மடங்கு பலத்தை அளித்துள்ளது. 

அதுமட்டுமின்றி அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் இருப்பதால் டெல்லி அணி மிகுந்த பலமாக இருக்கும். மும்பை அணியை வீழ்த்தி இம்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி டெல்லி தான். அந்த அளவிற்கு அவர்கள் பலமாக இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுவரை இந்த சீசனில் நடைபெற்று முடிந்துள்ள முதல் எட்டு போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement