
IPL 2021: Broadcasters Release List Of Power-packed Commentators For UAE Leg (Image Source: Google)
ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் முடிந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் அமீரகம் சென்று தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்நிலையில், ஐபிஎல்லை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.
ஆங்கில வர்ணனையாளர்கள்: ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர், லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப்தாஸ் குப்தா, அஞ்சும் சோப்ரா, இயன் பிஷப், அலன் வில்கின்ஸ், எம்பாங்வா, நிகோலஸ் நைட், டேனி மோரிசன், சைமன் டௌல், மேத்யூ ஹைடன், கெவின் பீட்டர்சன்.