
IPL 2021: Buttler, Archer To Miss 2nd Leg, RR Bring In Kiwi W-K Phillips (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தற்போதிலிருந்தே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதற்கேற்றவாறு ஐபிஎல் அணிகளும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் தனது குழந்தைப் பிறப்பு காரணமாக எஞ்சியுள்ள ஐபில் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
அதேபோல் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.