
IPL 2021: Buttler's 124-knock propels RR to 220/3 against SRH (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் 28ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பட்லர் - சாம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர், 53 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 48 ரன்களில் ஆட்டமிழக்க, 124 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.