ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 14ஆவது சீசன் நாளுக
உள்ளூர் கிரிக்கெட் தொடரான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 14ஆவது சீசன் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமின்றி ரசிர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டி வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோது அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் : வான்கேடே மைதானம், மும்பை
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலா ஒரு போட்டியில் வெற்றியையும், அதே சமயத்தில் தலா ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளன.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் வலிமையாகத் தோன்றினாலும், இவர்களில் அதிரடியான ஆட்டம் ராஜஸ்தான் அணியுடன் பழிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேசமயம் ராஜஸ்தான் அணிக்கு அக்மார்க் ஸ்பின்னர் இல்லாதது சற்று பின்னடைவாக உள்ளது.மும்பை மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்பதால் இரு அணியும் அதிக ரன்களை குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்போட்டியில் டாஸ் வெல்வதும் வெற்றியாளர்களை முடிவு செய்ய உதவும். இரண்டாவது இன்னிங்ஸின்போது மும்பையில் பனி பொழிவு அதிகம் இருக்கும். அது இரண்டாவதாக பேட் செய்கிற அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா 23 ஆட்டங்களில் நேருக்கு நேராக விளையாடி உள்ளன. அதில் சென்னை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தேச அணி
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட்/ ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், மனன் வோரா/ யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜெய்தேவ் உனாட்கட், சேட்டன் சக்கரியா.
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர்.
- பேட்ஸ்மேன்கள்: சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர், ரியான் பராக்
- ஆல்ரவுண்டர்கள்: மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ், ரவீந்திர ஜடேஜா
- பவுளர்கள்: தீபக் சஹார், ஜெய்தேவ் உனாட்கட், ஷர்துல் தாக்கூர்.
Win Big, Make Your Cricket Tales Now