
IPL 2021: Confidence high after playing Test cricket for India, says Siraj (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.
அதில் ஆர்சிபி அணிக்காக கடைசி ஓவரை வீசிய முகமது சிராஜ் துல்லியமாக பந்துவீசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
போட்டி முடிவுக்கு பின் பேசிய முகமது சிராஜ், “இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் எனது பந்து வீச்சில் அதிகம் கவனம் செலுத்த முடிந்தது. அதிலும் தற்போது எனது லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது எனக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. அதன் காரணமாகவே நேற்றைய போட்டியில் என்னால் துல்லியமாக பந்துவீச முடிந்தது” என தெரிவித்துள்ளார்.