
IPL 2021: CSK need to tune up slightly ahead of playoffs, says Dhoni (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர் டு பிளெசிஸ் 76 ரன்கள் குவித்தார்.
அதன்பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலின் அபார ஆட்டம் காரணமாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 139 ரன்களைக் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தக்கவைத்தது.