ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ்vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
தோனி தலைமையிலான பலம் வாய்ந்த சென்னை அணியை இன்று டெல்லியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
தோனி தலைமையிலான பலம் வாய்ந்த சென்னை அணியை இன்று டெல்லியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ்vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம்: அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம்: இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றிப்பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆம் இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. கடந்தப் போட்டியில் டெல்லி அணியுடன் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்தது.
சென்னையை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு பலமான ஒன்றாக அமைந்துள்ளது. ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா ஆர்சிபி அணியுடனான கடந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். அதேபோல சாம் கரனும் தனக்கான பங்கை நிறைவேற்றுகிறார்.
பவுலிங்கை பொறுத்தவரை தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிரும் அருமையாக பந்துவீசுகின்றனர். இதுவரை சிஎஸ்கே அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர்.
அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சனையும் பெரிதும் நம்பி இருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே ஹைதராபாத் அணி வெளிநாட்டு வீரா்களையே நம்பியிருக்கிறது.
மிக முக்கியமாக பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், ரஷீத் கானையுமே மலையென நம்பியிருக்கிறது. ஹைதராபாதை பொறுத்தவரை இந்தப் போட்டியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளும் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 15முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 முறையும், சன்ரைசர்ஸ் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டு பிளெஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், டுவைன் பிராவோ / மொயீன் அலி, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் , ஜானி பேர்ஸ்டோவ் , கேன் வில்லியம்சன், விராட் சிங் / மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, கேதார் ஜாதவ், ரஷீத் கான், ஜகதீஷா சுஜித், கலீல் அகமது, சித்தார்த் கவுல் / புவனேஸ்வர் குமார்.
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன் குறிப்பு
- விக்கெட் கீப்பர் - ஜே பேர்ஸ்டோவ் (சி),
- பேட்ஸ்மென் - டூ பிளெஸிஸ், வார்னர், கெய்க்வாட், வில்லியம்சன், அம்பத்தி ராயுடு
- ஆல்-ரவுண்டர்கள் - ஜடேஜா, அபிஷேக் ஷர்மா
- பந்துவீச்சாளர்கள் - ரஷீத் கான், சர்தூல் தாக்கூர்,இம்ரான் தாஹிர்
Win Big, Make Your Cricket Tales Now