 
                                                    
                                                        IPL 2021: CSK won the toss and choose to bowl  (Image Source: Google)                                                    
                                                ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பந்துவீச முடிவுசெய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான சென்னை அணியில் தொடக்க வீரர் டுவைன் பிராவோவிற்கு பதிலாக லுங்கி இங்கிடி களமிறங்குகிறார். அதேசமயம் கொல்கத்தா அணியில் ஹர்பஜன்சிங்கிற்கு பதிலாக கம்ளேஷ் நாகர்கொட்டி களமிறங்குகிறார்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        