
IPL 2021: Defending champions Mumbai Indians leave for UAE (Image Source: Google)
ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டு போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்றும் அறிவித்தது.
இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபி புறப்பட்டுள்ளது.