
IPL 2021: Delhi Capitals finishes off 164/5 their 20 overs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 56ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷிகர் தவான் - பிரித்வி ஷா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் 43 ரன்களிலும், பிரித்வி ஷா 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட டெல்லி அணி சற்று தடுமாறியது.