
IPL 2021: Delhi Capitals opt to bowl (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.
இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.