 
                                                    
                                                        IPL 2021: Delhi Capitals won the toss and choose to bowl first (Image Source: Google)                                                    
                                                ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஆர்சிபி அணியில் நவ்தீப் சைனிக்கு பதிலாக ராஜட் படிதரும், டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக டேனியல் சாம்ஸும் இடம்பெற்றுள்ளனர்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        