
IPL 2021: Dhoni knows what he's doing, pleasure to play under him, says Faf (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனுமானவர் ஃபாப் டூ பிளெசிஸ். இவர் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான போட்டிடுல் 95 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், சென்னை அணி இமாயலய இலக்கை நிர்ணயிக்கவும் உறுதுணையாக அமைந்தார்.
இந்நிலையில் போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டூ பிளெசிஸ், நேற்றைய போட்டியின் எனது ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இதே போல் இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. அதிலும் கெய்க்வாட் மீண்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு தேவையான வெற்றிடத்தை நிரப்பியுள்ளது.