Advertisement

ஐபிஎல் 2021: பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிட்டு வார்னிங் கொடுக்கும் தோனி!

பயிற்சியின் போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்சர்களை பறக்கவிடும் காணொளியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement
IPL 2021: Dhoni sounds warning bells, seen whacking huge sixes in training
IPL 2021: Dhoni sounds warning bells, seen whacking huge sixes in training (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 18, 2021 • 08:02 PM

இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று அச்சத்தால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 18, 2021 • 08:02 PM

நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்திய அணி, மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடப்பு சீசனில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பயிற்சி ஆட்டத்தின் போது சிக்சர்களை விளாசும் காணொளியை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. 

மேலும் நடப்பு சீசனின் முதல் பாதியில் தோனி பெரிதளவில் சோபிக்காத நிலையில், தற்போது பயிற்சி போட்டியில் அதிரடியாக விளையாடிவருகிறார். இதனால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள காணொளியானது, பிற அணிகளுக்கான வார்னிங் மெசாஜாக ரசிகர்கள் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement