
IPL 2021: Fans to return for resumption of league in UAE (Image Source: Google)
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களின்றி நடைபெற்றுவந்தது. இதில் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் நாளையில் இருந்து போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க ஐபிஎல் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.