
ஐபிஎல் 14ஆவது சீசனின் இறுதிப் போட்டியானது இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற லீக் மற்றும் பிளே ஆப் சுற்று போட்டிகளின் முடிவில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தோனி கோப்பையுடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் கொல்கத்தா அணியும் பலம் வாய்ந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் அவர்களும் கோப்பையை கைப்பற்ற மும்முரம் காட்டுவார்கள். இதன் காரணமாக இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற போவது எந்த அணி ? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.