
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தோனி “ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தபோது நிச்சயம் யாராவது ஒருவர் கௌரவமான ரன் குவிப்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அதனை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிராவோ ஆகியயோர்கள் செய்தார்கள்.
நாங்கள் நினைத்ததை விட சற்று அதிகமாக ரன் கிடைத்தது. 140 ரன்கள் வரை மட்டுமே வரும் என்று எதிர்பார்த்தநிலையில் 160 ரன்கள் வரை குவித்தது அபாரமான ஒன்று. இந்த மைதானம் சற்று ஸ்லோவாக இருந்ததால் அடிக்க ஆசைப்படும் வீரர்கள் ஆட்டம் இழந்திருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால் பின்னால் வருபவர்களுக்கு சிறுது கஷ்டமாகவே இருந்தது.