ஐபிஎல் 2021: மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி - இஷான் கிஷான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷான் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
மும்பை அணியின் இளம் அதிரடி வீரரான இஷான் கிஷன் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கும் தேர்வாகி விளையாடிய அவர் தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பட்டியலிலும் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷன் கிஷன் கடந்த இரு போட்டிகளாக மும்பை அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
Trending
இதனால் அவரது மோசமான ஃபார்ம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய அணி நிர்வாகத்திற்கும் கவலை அளித்தது. இந்நிலையில் நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கி 25 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரி என 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மோசமான ஃபார்ம்மில் இருந்து தற்போது மீண்டும் இஷான் கிஷன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மும்பை அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக மனரீதியாக வீரர்களின் நலம் என்பது முக்கியம். அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அவருக்கு நல்ல தன்னம்பிக்கை அளிக்கும்.
போட்டிக்கு பின்னர் பேசிய இஷான் கிஷன், “மீண்டும் நான் அணியில் ஓபனிங் இறங்கி ரன்களைக் குவித்து வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது. நிச்சயம் எங்கள் அணி தற்போது நல்ல இடத்தை பெற்றுள்ளது.
அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு ஏற்ற இறக்கம் வரும். அந்த வகையில் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட எங்களது பல பேட்ஸ்மேன்கள் இம்முறை ரன்களை குவிக்க முடியவில்லை. இருந்தாலும் எங்களது அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியோர் எங்களை ஆதரித்தனர். என்னுடைய பேட்டிங் ஃபார்ம் மோசமான போது நான் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் பேசினேன், அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர்.
அதுமட்டுமின்றி பொல்லார்டு என்னிடம் வந்து “நீ எப்பொழுதுமே சாதாரணமாக இரு”, நிச்சயம் உன் வழியில் நீ பேட்டிங் செய்வாய்” உன்னுடைய பழைய பேட்டிங் வீடியோக்களை பார் அதில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறாய் என்பதை பார்த்தால் உனக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும் என்று கூறினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அவர் கூறியது படியே நான் என்னுடைய ஆட்டத்தின் சில வீடியோக்களை பார்த்தேன். அதன் பின்னர் இன்றைய போட்டியிலும் அவ்வாறு விளையாட வேண்டும் என்று நினைத்து சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now