
IPL 2021: Harshal Patel Breaks Huge IPL Record With Three-Wicket Haul vs Rajasthan Royals (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது.
இந்த போட்டில் ஆர்சிபி அணியின் ஹர்சல் படே 3 விக்கெட் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல் 26 விக்கெட்டை எடுத்து, நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
இதுவரை, 11 ஆட்டத்தில் அவர் 26 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் ஹர்ஷல் படேல் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.