
IPL 2021: Hyderabad bowled out by Punjab! (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 14 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அதிரடி மன்னர்கள் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், ஹெண்ட்ரிக்ஸ் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் பஞ்சாப் அணி 101 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இக்கட்டான சூழலில் பஞ்சாப் அணிக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை சிறுக சிறுக உயர்த்தினார்.