
IPL 2021: I call Dwayne Bravo my brother, reveals MS Dhoni (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 35 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி கோலி மற்றும் படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.