Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 21, 2021 • 23:47 PM
IPL 2021: Karthik Tyagi's tremendous bowling ; Rajasthan Royals thriller won against PBKS
IPL 2021: Karthik Tyagi's tremendous bowling ; Rajasthan Royals thriller won against PBKS (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். பின் 36 ரன்களில் லூயிஸும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Trending


அதன்பின் இறுதியில் மஹிமொல் லமோர் அதிரடியாக விளையாடி 43 ரன்களைச் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் கேப்டன் கே.எல்.ராகுல் - மயாங்க் அகர்வால் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.

மேலும் முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் சேர்த்தது. இதில் மயாங்க் அகவர்கள் அரைசதம் அடித்திருந்தார். பின் அரைசதம் அடிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 49 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மயாங்க் அகர்வாலும் 67 ரன்களில்  விக்கெட்டை இழந்தார். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ஆனால் 19ஆவது ஓவரில் 4 ரன்கள் வெற்றி என்ற நிலையில் நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியைச் சந்தித்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement