
IPL 2021: KKR beat Panjab by 5 wickets (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி, பஞ்சாப் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரர்கள் ராகுல், கெய்ல், பூரன், ஹென்ட்ரிக்ஸ், ஷாரூக் கான் என அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின் கடைசி ஓவர்களில் கிறிஸ் ஜோர்டன் ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.