
IPL 2021: KKR Bowlers Restrict Feeble SRH At 115/8 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் சஹா ரன் ஏதுமின்றியும், ஜேசன் ராய் 10 ரன்னிலும், வில்லியம்சன் 26, பிரியம் கார்க் 21 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய அப்துல் சமாத் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்தினார். பின்னர் அவரும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.