
IPL 2021: KKR have recorded a massive 87-run win and have almost stormed into the playoffs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணி சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டோன், ஷிவம் துபே, கிளென் பிலீப்ஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.