
IPL 2021: KKR name Tim Southee as replacement for Pat Cummins (Image Source: Google)
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் செப்டம்பா் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். ஏலத்தில் கேகேஆர் அணியால் ரூ. 15.5 கோடிக்கு வாங்கப்பட்ட கம்மின்ஸ், கேகேஆர் விளையாடிய ஏழு ஆட்டங்களிலும் பங்கேற்று 9 விக்கெட்டுகள் எடுத்தார். சிஎஸ்கேவுக்கு எதிராக 66 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!