
IPL 2021: KKR stumbled in Rajasthan bowling (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுப்மன் கில், நிதீஷ் ராணா இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் இப்போட்டியிலும் சுப்மன் கில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படித்திய நிதீஷ் ராணாவும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராகுல் திரிபாதியும் 36 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.