
IPL 2021: Kolkata Knight Riders won by 9 wkts (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நத்தியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி படுமோசனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இதனால் 19 ஓவர்கள் முடிவிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவத்தி, ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.