
IPL 2021: Kulwant Khejroliya replaces injured Manimaran Siddharth in Delhi Capitals squad (Image Source: Google)
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ளார். ஏலத்தில் அவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது டெல்லி அணி. 2021 முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் 4/20 எனச் சிறப்பாகப் பந்துவீசி தமிழக அணி கோப்பையை வெல்ல மணிமாறன் சித்தார்த் உதவினார்.
இந்நிலையில் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மணிமாறன் சித்தார்த்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.