ஐபிஎல் 2021: போட்டிகள் மும்பைக்கு மாற்றம்?
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸின் 2ஆம் அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஆறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேகேஆர் அணியை சேர்ந்த வீரர்களுக்கு நேற்றைய தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் நடைபெற இருந்த கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மீதமிருக்கும் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நட்டின் முக்கிய நகரங்களில் கரோனா தொற்று அதிக அளவில் பரவுவதாலும், மும்பையில் நான்கு சர்வதேச மைதானங்கள் உள்ளதாலும் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த வாரத்திலிருந்து ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணைகள் மற்றும், பிளே ஆஃப், இறுதி போட்டிக்கான அட்டவணைகளிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now