
IPL 2021: Michael Hussey tests COVID-19 positive for the second time (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் போது சென்னை அணியில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மைக் ஹஸ்ஸி, எல்.பாலாஜி, கேகேஆர் அணியை சேர்ந்த பிரசித் கிருஷ்ணா, டெல்லி அணியை சேர்ந்த அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.