
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்டது. வீரர்களுக்கு பல அடுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என பாதுகாப்பான முறையில் தொடர் நடத்தப்பட்டது.
ஆனால் பயோ பபுளில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சன்ரைசர்ஸ் வீரர் விருதிமான் சாஹா, டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, சிஎஸ்கே பயிற்சியாளர்கள், மைக் ஹஸ்ஸி, பாலாஜி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு புறப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே பயிற்சியாளர்கள் மைக் ஹஸ்ஸி, எல்.பாலாஜி ஆகியோர் டெல்லியில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.