
IPL 2021: MS Dhoni-led Chennai Super Kings depart for UAE (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதியியேலே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.
இதில் முதல் போட்டியிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றது.